மேலும் செய்திகள்
இயற்கை நலச்சங்கம் தொடக்கம்
25-Mar-2025
வானுார்; திருச்சிற்றம்பலம் ஊராட்சி கோபாலகிருஷ்ணா நகர் மற்றும் முல்லை நகர் குடியிருப்போர் நலச் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.ஜெயவேல் வரவேற்றார். கணபதி தலைமை தாங்கினார். ஆரோக்கியநாதன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் வெங்கடேசன், குடியிருப்பு நலச் சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார்.அவரிடம், குடியிருப்போர் சங்கத்தினர், அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரக்கோரி கோரிக்கை மனு அளித்தனர்.மயிலம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் செழியன், குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். முத்துக்குமரன் நன்றி கூறினார்.
25-Mar-2025