உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேசிய கராத்தே போட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு

தேசிய கராத்தே போட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு

விழுப்புரம் : தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு, விழுப்புரம் அரசு பள்ளி மாணவர் தேர்வாகியுள்ளார்.சிவகங்கை மாவட்டத்தில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவில் பள்ளிகளுக்கிடையேயான கராத்தே போட்டி நடந்தது.கடந்த செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் நடந்த போட்டியில் விழுப்புரம் எய்ம்ஸ் கராத்தே மற்றும் யோகா பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும், தும்பூர் அரசு பள்ளி மாணவர் மகேந்திரன், 19; வயதுக்குட்பட்டோருக்கான 58 கிலோ என்ற எடை பிரிவில் முதலிடம் பிடித்து, தங்கம் வென்றார்.தங்கம் வென்ற மாணவர் மகேந்திரனை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விழுப்புரம் எய்ம்ஸ் கராத்தே யோகா பயிற்சி மைய நிறுவனர் சென்சாய் ரகுராமன் பாராட்டினர்.மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர் மகேந்திரன், அடுத்து இந்திய அரசு பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும், தேசிய அளவிலான கராத்தே போட்டியில், தமிழக அணி சார்பிலும் பங்குபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ