மேலும் செய்திகள்
லயன்ஸ் கிளப் தாராளம்
10-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில், ராயல்ஸ் லயன்ஸ் கிளப் சார்பில் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. தனியார் மகாலில் நடந்த, முகாமிற்கு, லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் ராஜாசுப்ரமணியம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் இராமவாசுதேவன், வட்டார தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் அய்யப்பன் வரவேற்றார். விழுப்புரம் ஆதியோக மையம் மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து, யோகா பிராணாயமம் மற்றும் இயற்கை வாழ்வியல் முறை பயிற்சி அளிக்கப்பட்டது. ராயல்ஸ் லயன்ஸ் கிளப் தலைவர் சபரிநாதன், துணை தலைவர் குமார், செயலாளர் குமார், பொருளாளர் சதீஷ், நகர கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் தங்கசேகர், வட்டார தலைவர்கள் கோபு, தமிழ்செல்வன், நிர்வாகிகள் சிவராமன், சுந்தர், பாண்டியன், பிரபு, பாபு, வழக்கறிஞர் இளம்வழுதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
10-Oct-2025