மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
01-Aug-2025
விழுப்புரம் : வளவனுார் பேரூராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பில், விழுப்புரம் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிய புதிய கட்டடங்களை லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். விழுப்புரம் அருகே வளவனுார் பேரூராட்சிக்கு உட்பட்ட, 9 வது வார்டு, கால்நடை மருத்துவமனை வீதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், ரூ.9.80 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழுப்புரம் தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., புதிய கட்டடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து வளவனுார் 15 வது வார்டு, பக்கமேடு பகுதியில், விழுப்புரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய தானிய உலர் களத்தை, லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த விழாவில், வளவனுார் பேரூராட்சி தலைவர் மீனாட்சி ஜீவா, பேரூராட்சி செயலாளர் ஜீவா, செயல் அலுவலர் அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், தலைமை கழக வழக்கறிஞர் சுவை சுரேஷ், துணை தலைவர் அசோக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு, அவை தலைவர் சரபோஜி, துணை செயலாளர்கள் ராஜேந்திரன், பெரியசாமி, பொருளாளர் ரகுமான், வார்டு செயலாளர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
01-Aug-2025