உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குடிநீரே வரல... வரி மட்டும் கட்ட சொல்றாங்க... நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் குற்றச்சாட்டு

குடிநீரே வரல... வரி மட்டும் கட்ட சொல்றாங்க... நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் குற்றச்சாட்டு

திண்டிவனம் : நாகலாபுரத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் புதிய தரைப் பாலம் கட்ட 2.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தற்காலிகமாக பாலம் சீரமைக்க 8 லட்சம் ரூபாய் ஒதுக்கிது ஏன் என கவுன்சிலர் கேள்வி எழுப்பினார்.திண்டிவனம் நகர மன்ற கூட்டம் நேற்று தலைவர் நிர்மலா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், கமிஷனர் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கவுன்சிலர்கள் குறைகள் மற்றும் புகார் தெரிவித்து பேசியதாவது:நாகலாபுரத்தில் சேதமடைந்த தரைப்பாலம் வரும் ஏப்ரல் மாதத்தில் புதிய பாலம் கட்டுவதற்காக 2.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தற்காலிகமாக பாலம் சீரமைக்க 8 லட்சம் ரூபாயை ஏன் ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். புதிய பாலம் கட்டும் போது, தற்காலிக பாலம் அப்புறப்படுத்த வேண்டியிருப்பதால், நகராட்சி பணம் வீணாக செலவு செய்யப்படுகின்றது.புதிய குடியிருப்பு பகுதிகளில் மின் கம்பம் அமைப்பதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் அந்த தொகையை நகராட்சி செலவு செய்ய வில்லை. 23, 24வது வார்டுகளில் கடந்த 10 மாதங்களாக நகராட்சி குடிநீர் வழங்கவில்லை. ஆனால், அந்த பகுதியில் குடிநீர் வரி கட்ட வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்புகின்றனர்.பூதேரி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து ஒராண்டாகியும் இதுவரை புதிய சாலை போடவில்லை.வார்டு பிரச்னை குறித்து நகர மன்ற தலைவரிடம் கேட்டால், அவர் சக கவுன்சிலரை கைகாட்டுகிறார்.இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.கூட்டத்தில் 23 கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றதால் பல இருக்கைககள் காலியாக இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ