உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் நிறைவு

என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் நிறைவு

விழுப்புரம் : அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது. விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி, என்.எஸ்.எஸ்., மாணவியர்கள், கீழ்பெரும்பாக்கத்தில் துாய்மை பணியில் முகாமில் ஈடுபட்டனர். அங்குள்ள, அரசு மேல்நிலை பள்ளி, துவக்க பள்ளிகள், கோவில் வளாகங்களில் துாய்மை செய்தனர். முகாமின் நிறைவு விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா தலைமை தாங்கினார்.லட்சுமணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். திண்டிவனம் கல்வி அலுவலர் சிவசுப்ரமணி யன், என்.எஸ்.எஸ்., திட்ட தொடர்பு அலுவலர் ராஜசேகரன், திட்ட அலுவலர் செந்தில்குமாரி, கீழ்பெரும்பாக்கம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் யமுனாபாய் உட்பட பலர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் குழந்தைவேலு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ