உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

 செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் தொகுப்பூதியம் வழங்கக் கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேவசேனா தலைமை தாங்கினார். மாநில தலைவர் அசோக் மாதவன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட பொருளாளர் நர்மதா உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், செவிலியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி