நெல் வயல்களில் அதிகாரிகள் ஆய்வு
திண்டிவனம்: மரக்காணம் வட்டார வேளாண் உழவர் நலத்துறை மூலம் ரோஷணை கிராமத்தில் வேளாண்மை அதிகாரிகள் நெல் வயலில்களில் ஆய்வு செய்தனர். திண்டிவனம் அடுத்த ரோஷணை கிராமத்தில், சம்பா பட்டத்தில் நெல் நடவு செய்யப்பட்டது. இந்த நெற்பயிரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஆரோக்கியராஜ், திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருவரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது நெற்பயிரில் இலை சுருட்டுப் புழு மற்றும் தண்டு துளைப்பான் பாதிப்பின் அறிகுறி தென்பட்டது. மேலும், இந்த பாதிப்பு பொருளாதார சேதநிலைக்குட்பட்டு இருந்ததால் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை முறையை கடைபிடித்து மேலாண்மை செய்ய அறிவுறுத்தப் பட்டது.