உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பனையபுரம் பள்ளி ஆண்டு விழா

பனையபுரம் பள்ளி ஆண்டு விழா

விக்கிரவாண்டி; பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.ஊராட்சி தலைவர் காந்தரூபி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்புமணி, துணைத் தலைவர் கலா், வள மைய மேற்பார்வையாளர் பானு, மேலாண்மைக் குழு மஞ்சுளா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை உமா வரவேற்றார். ஆசிரியை சந்திரலேகா ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.மன்ற உறுப்பினர்கள் தருமன், பிரகாஷ், குமுதாபாபு, கல்விக்குழு கிருஷ்ணமூர்த்தி, லுார்துசாமி, ஆசிரியர் பயிற்றுனர் நிர்மலா, சிறப்பு ஆசிரியர் இருதயராஜ், ஆசிரியர்கள் தெய்வசிகாமணி, செல்வி, சசிகலா, கமலக்கண்ணன், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை தரணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !