உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அபிரமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா  

அபிரமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா  

விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருவாமாத்துார் கிராமத்தில் உள்ள முத்தாம்பிகை உடனாகிய அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நடைபெற்றது.பங்குனி உத்திர பெருவிழா திருவாமாத்துாரில் உள்ள முத்தாம்பிகை உடனாகிய அபிராமேஸ்வரர் கோவிலில் கடந்த 31ம் தேதி தேரடி விநாயகர் வழிபாடு, பந்தக்கால் நடுதலோடு துவங்கியது. தொடர்ந்து பிடாரி உற்சவம், யாகசாலை பூஜை, அதிகார நந்தி பஞ்சமூர்த்தி வழிபாடு, சந்திர பிரபை, பூதவாகனம், நாகவாகனம், யானை வாகனம் வீதியுலா நடைபெற்றது.இதையடுத்து, நேற்று காலை 9.00 மணிக்கு பொய்கைக்கரை விநாயகர் அபிஷேக வழிபாடு நடந்தது. பின், சுவாமி கோவிலில் இருந்து தேரில் எழுந்தருளி ரத உற்சவம் செல்லும் காட்சி நடைபெற்றது. இதில், பக்தர்களை தேரை முக்கிய மாட வீதிகளாக வழியாக வடம்பிடித்து இழுத்து சென்றனர். இறுதியாக தேர் கோவிலை வந்தடைந்தது. இதில், பக்தர்கள், பொதுமக்கள் தங்களின் குடும்பங்களோடு திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (11ம் தேதி) காலை 9.00 மணிக்கு நடராஜர் புறப்பாடு, மாலை 5.00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ