உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., பிரசாரத்தில் ஊர்வலமாக பங்கேற்பு

அ.தி.மு.க., பிரசாரத்தில் ஊர்வலமாக பங்கேற்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்ற பிரசார கூட்டத்தில், கோலியனுார் ஒன்றிய செயலாளர், தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக சென்று கலந்து கொண்டனர்.விழுப்புரம், நான்கு முனை சிக்னல் சந்திப்பில், அ.தி.மு.க., சார்பில் பொதுச்செயலாளர் பழனிசாமியின் பிரசார கூட்டம் நடந்தது.இதில், விழுப்புரம் நகராட்சி திடலில் இருந்து கோலியனுார் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, முன்னாள் ஒன்றிய சேர்மன் விஜயா சுரேஷ்பாபு தலைமையில் ஆயிரக்கணக்கான கட்சியினர் ஊர்வலமாக சென்று வரவேற்பு அளித்து, கூட்டத்தில் கலந்து கொண்டனர்.அப்போது ஒன்றிய இணை செயலாளர் மஞ்சுளா சுரேஷ்பாபு, மாவட்ட பிரதிநிதிகள் ராஜ், ஜெயக்குமார், இளைஞரணி செயலாளர் ரமேஷ், மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், இளைஞரணி துணை செயலாளர் பாலசுப்ரமணியன், இணை செயலாளர் குமார், பாசறை துணை தலைவர் முரளிராஜா, ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் பலராமன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் அழகேசன், இலக்கிய அணி செயலாளர் ரத்தினவேல், பாசறை செயலாளர் விஜயசாரதி, சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பிரித்தா ஞானமணி பழனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ