உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் ரயில் திண்டிவனத்துடன் திரும்பியதால் பயணிகள் ஏமாற்றம்

விழுப்புரம் ரயில் திண்டிவனத்துடன் திரும்பியதால் பயணிகள் ஏமாற்றம்

திண்டிவனம்: தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் மெமு பாசஞ்சர் ரயில், திண்டிவனத்துடன் திரும்பி விடப்பட்டதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். சென்னை, தாம்பரத்திலிருந்து விழுப்புரத்திற்கு தினமும் மெமு பாசஞ்சர் ரயில் திண்டிவனம் ரயில் நிலையம் வழியாக சென்று வருகிறது. நேற்று வழக்கம் போல், தாம்பரத்தில் இருந்து காலை 9:45 மணிக்கு விழுப்புரம் நோக்கி வந்த ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் 11:40 மணியளவில் நிறுத்தப்பட்டது. விழுப்புரம் செல்லும் வழியான முண்டியம்பாக்கத்தில் ரயில்வே இருப்பு பாதையில் பணிகள் நடந்ததால், திண்டிவனம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு, மீண்டும் மாலை 2;25 மணிக்கு தாம்பரத்திற்கு திருப்பி இயக்கப்பட்டது. இதனால் ரயிலில் விழுப்புரத்திற்கு வந்த பயணிகளும், விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு செல்ல காத்திருந்த பயணிகளும் ஏமாற்றமடைந்தனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ரயில்வே பாதையில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணி நடப்பது வழக்கம். இதன் காரணமாக திண்டிவனம் - விழுப்புரத்திற்கும் இடைப்பட்ட விக்கிரவாண்டி ரயில் பாதையில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. அதிகாரிகளின் அனுமதி பெற்று, திண்டிவனத்தில் இருந்து தாம்பரத்திற்கு திருப்பி விடப்பட்டது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை