உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பென்னிகுயிக் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பென்னிகுயிக் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் பென்னிகுயிக் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ., வழங்கினார்.விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் விவசாய அணி சார்பில் நடந்த விழாவிற்கு பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். துணை சேர்மன் பாலாஜி, விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம், பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு,மாவட்ட பிரதிநிதி திலகர், பாபுஜி யுவராஜ் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் பாண்டியன் வரவேற்றார்.விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.,அன்னியூர் சிவா பென்னி குயிக் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வேம்பிரவி, ஜெயபால், ரவிதுரை, மாவட்டத் தலைவர் அரிகரன்,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் செல்வரங்கம், சிறு குறு தொழிற்சங்க மாவட்ட தலைவர் அம்மன் கருணாநிதி, நகர தலைவர் தண்டபாணி, நகர செயலாளர் நைனா முகமது, நகர துணைச் செயலாளர் பிரசாந்த் முன்னாள் சேர்மன் மலர்மன்னன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !