உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பென்ஷனர்கள் கூட்டமைப்பு கூட்டம்

பென்ஷனர்கள் கூட்டமைப்பு கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட துணைத் தலைவர் குகசரவணபவன் தலைமை தாங்கினார். ஆய்வுக்குழு உறுப்பினர் ஜானகிராமன், மாநில பிரதிநிதி கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் ராஜகோபால் வரவேற்றார். செயலாளர் விவேகானந்தன் தீர்மானங்களை முன்மொழிந்தார், பொருளாளர் கோவிந்தராஜ் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மாநில துணைத்தலைவர் சிதம்பரம், தணிக்கை குழு உறுப்பினர் துரைக்கண்ணு சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் பயணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை