உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருநாவலுார் ஜோசப் கல்லுாரியில் புதிய படிப்புகள் துவங்க அனுமதி

திருநாவலுார் ஜோசப் கல்லுாரியில் புதிய படிப்புகள் துவங்க அனுமதி

விழுப்புரம், : திருநாவலுார் ஜோசப் கல்லுாரியில் தொலைக்கல்வி மற்றும் இணையவழி கல்வி மூலம் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., முதுகலை பட்டப்படிப்புகள் பயில திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.எம்.பி.ஏ., பாடப்பிரிவில் மார்க்கெட்டிங், பைனான்ஸ், மனிதவள மேலாண்மை, கணினி மற்றும் ஆப்ரேஷன்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கற்போர் உதவி மையங்கள் மூலம் திருநாவலுார் ஜோசப் கல்லுாரியில் சேர்ந்து முதுநிலை, இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெறலாம்.கடந்த 2000ம் ஆண்டு துவங்கிய ஜோசப் கலை அறிவியல் கல்லுாரியில் நான்கு பாடப்பிரிவுகள் இருந்தன.தற்போது 22 பாட பிரிவுகள் செயல்படுகிறது. இங்கு, ஆராய்ச்சி பாடப்பிரிவுகளில் மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகள் துவங்க அனுமதி வழங்கியதையொட்டி, கல்லுாரி செயலாளர் பிரபாகர் ஜெயராஜ், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வத்தை சந்தித்து நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ