மாற்றுத்திறனாளிகள் மனு தாக்கல்
கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியத்தில் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் மனு தாக்கல் செய்தனர். கண்டமங்கலம் ஒன்றியத்தில், மொத்தம் உள்ள 46 ஊராட்சிகளுக்கு தலா 1 வார்டு உறுப்பினர் என 46 உறுப்பினர்கள், 25 ஒன்றிய உறுப்பினர்களில் 1 உறுப்பினர் பதவி, நியமன பதவியாக தேர்வு செய்யப்பட உள்ளது. அதன்படி ஒன்றிய உறுப்பினர் பதவி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அண்ணாமலை தலைமையில் கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பிரேமாவதி, நாராயணன் ஆகியோரிடம் மனு தாக்கல் செய்தனர். விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.