மேலும் செய்திகள்
கோயில்களில் கும்பாபிேஷகம்: பக்தர்கள் பரவசம்
05-Sep-2025
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அடுத்த பழையகருவாட்சி பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த, 2ம் தேதி காலையில், முதல் யாகசாலை மற்றும் கணபதி பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ux8w8x8u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று காலை கோ பூஜையும், 4ம் கால நித்ய ஹோமமும் நடந்தது. தொடர்ந்து காலை 10:15 மணிக்கு கலச புறப்பாடும், மூலவர் விமானம் கும்பாபிஷேகமும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி திருமண வைபோக நிகழ்ச்சி நடைபெற்றது. பஜனைக் குழுவினர் இசை நிகழ்ச்சியுடன் இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.
05-Sep-2025