கன மழையால் இடிந்து விழுந்த நீதிமன்ற சுவரை சீரமைக்க மனு
திண்டிவனம்: திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கனமழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை சீரமைக்குமாறு முதல்வரிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.பெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்வதற்காக முதல்வர் ஸ்டாலின் விழுப்புரத்திலிருந்து காரில் திண்டிவனத்திற்கு வந்தார். அப்போது ஜக்காம்பேட்டையிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் எதிரில் முதல்வர் கார் வந்த போது திண்டிவனம் வழக்கறிஞர் சங்க பொது செயலாளர் பாபு தலைமையில் வழக்கறிஞர்கள் முதல்வரின் காரை நிறுத்தி கோரிக்கை மனு கொடுத்தனர்.அதில் கனமழையால் நீதிமன்றத்திலுள்ள 100 மீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துவிட்டதை சீரமைத்து தருவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்என்று கூறியருந்தனர்.