உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மேம்பாலத்தை சீரமைக்க பா.ம.க.,வினர் மனு

மேம்பாலத்தை சீரமைக்க பா.ம.க.,வினர் மனு

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டியில் பெஞ்சல் புயலில் பழுதடைந்த வராக ஆற்று மேம்பாலம் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பா.ம.க., வினர் மனு அளித்தனர்.விழுப்புரம் வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜா தலைமையில் விக்கிரவாண்டி தாசில்தார் யுவராஜிடம் அளித்த மனு:விக்கிரவாண்டி வராக ஆற்றில் பெஞ்சல் புயலின் போது பழுதடைந்த மேம்பாலத்தை பொதுமக்கள் நலன் கருதி சீரமைக்க வேண்டும். வி.சாலையில் உள்ள குளிர்பான கம்பெனி யிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் ஏரியில் கலந்து மாசு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் கம்பெனியினரால் உறிஞ்சப்படுவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.பா.ம.க., நகர செயலாளர் சங்கர், வழக்கறிஞர் சரவணன், கட்சி நிர்வாகிகள் வசந்த ராமன், கார்த்தி, செங்கோட்டையன், தனகோடி, கணேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !