உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விநாயகர் சதுர்த்தி; போலீசார் ஆலோசனை

விநாயகர் சதுர்த்தி; போலீசார் ஆலோசனை

வானுார்; கோட்டகுப்பம் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிலை அமைக்கும் குழுவினருடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., உமாதேவி தலைமை தாங்கி, விநாயகர் சிலை அமைப்பது மற்றும் ஊர்வலத்தில், அமைதியான முறையில் எடுத்து செல்வது குறித்து எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில், அனுமதி இன்றி விநாயகர் சிலை அமைக்க கூடாது; ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது; போலீசார் வழிகாட்டுதல் படி செயல்பட வேண்டும்; என அறிவுறுத்தப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர்கள் திருமால், விஸ்வநாதன், சத்யா மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை