உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூரை வீடு எரிந்து சேதம் போலீசார் விசாரணை

கூரை வீடு எரிந்து சேதம் போலீசார் விசாரணை

திருவெண்ணெய்நல்லுார்: கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.மழவராயனுார் ஆற்று தெரு பகுதியை சேர்ந்தவர் பாக்கியநாதன், 60; கூலிதொழிலாளி. இவரது கூரை வீடு நேற்று மதியம் 2:00 மணிக்கு திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். மேலும் மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்ததா அல்லது யாரேனும் மர்ம நபர்கள் தீவைத்து உள்ளார்களா என்பது குறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை