உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின் மோட்டார் திருட்டு  போலீஸ் விசாரணை 

மின் மோட்டார் திருட்டு  போலீஸ் விசாரணை 

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே விவசாய நிலத்தில் இருந்த மின் மோட்டார், ஒயர்கள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் . புதுச்சேரி, முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரைச் சேர்ந்தவர் குணசேகரன், 32; இவருக்கு பிள்ளைச்சாவடி அடுத்த மாத்துாரில் விவசாய நிலம் உள்ளது. கடந்த 25ம் தேதி விவசாய நிலத்திற்கு குணசேகரன் சென்று பார்த்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த மின் ஒயர் மற்றும் மின் மோட்டார் திருடு போனது தெரியவந்தது. குணசேகரன் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை