உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி துவக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி துவக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.பொங்கல் பண்டிகை முன்னிட்டு, நேற்று காலை விழுப்புரம் அய்யனார் கோவில் தெரு ரேஷன் கடை மற்றும் பூந்தோட்டம் ரங்கநாதன் தெரு ரேஷன் கடை பகுதியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணியை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்.கலெக்டர் பழனி முன்னிலை வகித்தார்.அப்போது அமைச்சர் கூறும் போது,'' தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுநீளக் கரும்பு மற்றும் வேட்டி, சேலை வழங்க முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி, விழுப்புரத்தில், பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள், ரேஷன் கடை பணியாளர்கள் மூலம்வீடு, வீடாக சென்று வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, விடுபடாமல் டோக்கன் வழங்கப்படவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 6 லட்சத்து 19 ஆயிரத்து 756 குடும்ப அட்டைதாரர்கள், 435 இலங்கை தமிழர் முகாம் வசிப்பவர்கள் என மொத்தம் 6 லட்சத்து 20 ஆயிரத்து 191 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது.ரேஷன் கடைகளில், வரும் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை, பொங்கல் பரிசுத் தொகுப்பு, டோக்கன் அடிப்படையில் வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கு 13ம் தேதி வழங்கப்படும். என்று தெரிவித்தார்.இதில் எம்.எல்.ஏ., லட்சுமணன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் விஜயசக்தி, விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, முன்னாள் சேர்மன் ஜனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ