உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் நகராட்சி பாதுகாப்பு அறைக்கு மின்சாரம் துண்டிப்பு பெண் ஊழியர்கள் கடும் அவதி

விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் நகராட்சி பாதுகாப்பு அறைக்கு மின்சாரம் துண்டிப்பு பெண் ஊழியர்கள் கடும் அவதி

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் ஸ்டாண்டில், நகராட்சி நிர்வாகம் மூலம் பயணிகள் உடைமைகள் வைக்கும் அறை (பொருட்கள் பாதுகாப்பு அறை) செயல்படுகிறது. இந்த அறையில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் தங்களின் லக்கேஜ்களை பாதுகாப்பாக வைத்து விட்டு, விழுப்புரம் பகுதியில் தனது சொந்த பணிகளை முடித்து கொண்டு, மீண்டும் வந்து பொருட்களை எடுத்து செல்வது வழக்கமாகும். இந்த அறைக்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த இரு ஆண்டுகளாக மின் கட்டணம் பாக்கியாக ரூ.22 ஆயிரத்திற்கும் மேலாக நிலுவை இருந்து வந்தது. இதனால் கடந்த 20 நாட்களுக்கு முன், பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சி பொருட்கள் பாதுகாப்பு அறையில் உள்ள பியூஸ் கேரியரை, மின்வாரிய ஊழியர்கள் கொண்டு சென்றதோடு, மின் இணைப் பையும் துண்டித்தனர். கட்டண பாக்கியை செலுத்தினால் தான், மின்இணைப்பு தரப்படும் என நகராட்சி ஊழியரிடம் தெரிவித்து சென்றனர். இது பற்றி, நகராட்சி நிர்வாகத்திடம், ஊழியர்கள் தெரிவித்தும் தற்போது வரை மின் கட்டண பாக்கியை செலுத்தாமல் உள்ளனர். இதனால், அந்த அறையில் நகராட்சி பெண் ஊழியர் உட்பட அனைவரும், இருளில் விளக்கேற்றி வைத்து கடும் சிரமத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். இரவு நேரங்களில் பாதுகாப்பின்றி பணிபுரியும் ஊழியர்களின் நிலையை கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம் மின் கட்டணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ