உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பள்ளத்தில் பைக் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி

திண்டிவனம் : திண்டிவனம் அருகே தரைப்பாலம் கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.மதுரை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் சேகர், 50; இவர், மரக்காணம் ரோட்டில் தங்கி திண்டிவனம் அடுத்த சிப்காட் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து திரும்பினார். 9:15 மணிக்கு திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராம கூட்ரோட்டில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், நெடுஞ்சாலைத்துறை சார்பில் தரைப்பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில், படுகாயமடைந்த சேகர் திண்டிவனம் அரசு மருத்துமவனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !