உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாதுகாப்பு சட்டம் அவசியம் தேவை தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை

பாதுகாப்பு சட்டம் அவசியம் தேவை தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை

விழுப்புரம்: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் மண்டல கூட்டம், விழுப்புரத்தில் நடந்தது.விழுப்புரத்தில் ஜெயேந்திரா பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு, பள்ளி தாளாளர் பிரகாஷ், செயலாளர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் துரைசாமி வரவேற்றார். சங்கத்தின் நிறுவன தலைவர் அரசகுமார் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், தமிழக பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் திட்டமிடாத பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு கட்டட அனுமதி வழங்க வேண்டும். நர்சரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக உயர்த்த வேண்டும். விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள், பெற்றோர் அனுமதி கடிதம் பெற்று சிறப்பு வகுப்புகளை நடத்திக் கொள்ள அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். பள்ளி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாநில பொருளாளர் ஸ்ரீதர் மனோகரன், மண்டல செயலாளர் வாசுதேவன், மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி