மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
28-Mar-2025
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி திடலில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் தனஞ்செழியன் தலைமை தாங்கினார். ஆறுமுகம், அய்யனாரப்பன், சக்திவேல் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன், நிர்வாகிகள் ராமச்சந்திரன், ஏசுமணி கண்டன உரையாற்றினர். மாவட்ட குழு சந்திரசேகர், ஆனந்தன், துணைத் தலைவர் பிச்சை உட்பட பலர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். வேலைக்கான கூலி பாக்கியை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.தேசிய ஊரக வேலை திட்டத்தில் 100 நாள் வேலையை, 200 நாளாக உயர்த்த வேண்டும். நாள் ஊதியத்தை 700 ஆக உயர்த்த வேண்டும். நிதி ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது, பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு வீடு வழங்க வேண்டும். அனைவருக்கும் வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
28-Mar-2025