மேலும் செய்திகள்
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியேற்பு
13-Aug-2025
செஞ்சி : செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி மாணவர்களுக்கு வாட்டில் பாட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள் தண்ணீர் குடிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, பேரூராட்சி தலைவர் மொத்தியார் அலி தன் சொந்த செலவில் சில்வர் வாட்டர் பாட்டில்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் கலையரசி தலைமை தாங்கினார். பி.டி.ஏ., தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் செந்தில் பாலா வரவேற்றார். பேரூராட்சி கவுன்சிலர்கள் கார்த்திக், பொன்னம்பலம், சங்கர், சுமித்ரா சங்கர், ஜான் பாஷா, சிவக்குமார், அகல்யா வேலு, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ஏழுமலை, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
13-Aug-2025