உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

விழுப்புரம்:கண்டமானடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நடமாடும் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.கண்டமானடி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆல் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடந்த நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அதிகாரி பிரியாபத்மாஷினி தலைமை தாங்கினார்.பொது சுகாதார நிபுணர் நிஷாந்த் மற்றும் ஆல் தி சில்ட்ரன் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டது.சுற்றுப்பகுதி மாற்று திறனாளிகளுக்கு, கை சக்கர நாற்காலிகள், வாக்கிங் ஸ்டிக்ஸ், முழங்கை ஊன்றுகோல்கள், மடிக்கக்கூடிய ஸ்டிக்ஸ் உள்ளிட்ட 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ