உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பொதுவினியோக திட்ட குறைகேட்பு முகாம்

 பொதுவினியோக திட்ட குறைகேட்பு முகாம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் பொதுவினியோக திட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் நடந்தது. வருவாய் துறை சார்பில் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து புதிய ரேஷன்கார்டு, பெயர் சேர்த்தல் நீக்கல் , முகவரி மாற்றம், முதியோர் மாற்றுத் திறனாளிகள் அங்கீகார சான்று உள்ளிட்ட மனுக்களை பெற்றார். தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளர்கள் தயாநிதி, நாகராஜன், பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ