மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
விழுப்புரம், : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் நேற்று 660 கோரிக்கை மனுக்கள் வந்தது.கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கி, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, விசாரித்து தொடர்புடைய அலுவலர்களிடம் உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண அறிவுறுத்தினார். முதியோர் உதவிதொகை, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, பட்டா மாறுதல், பிரதமர் வீடு கட்டும் திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 660 மனுக்கள் வந்தது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் தமிழரசன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.