உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொதுமறை தமிழ்ச்சங்க விழா

பொதுமறை தமிழ்ச்சங்க விழா

விழுப்புரம்: விழுப்புரத்தில், பொதுமறை தமிழ்ச் சங்கம் சார்பில் நுால் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு, சங்கத் தலைவர் கலியன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சச்சிதானந்தம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் திரைப்பட இயக்குனர் ராசி அழகப்பன், பாபு சசிதரன் ஆகியோர், வள்ளுவமும் வாழ்வியலும் நுாலை வெளியிட்டனர்.தொடர்ந்து விழாவில் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 150க்கு மேற்பட்ட சாதனை எழுத்தாளர்களுகள், கவிஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. செயலாளர் ஜெகன், கவுரவ தலைவர் ரமேஷ் பாபு, ஒருங்கிணைப்பாளர் அதனி, பொருளாளர் விக்டர், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை