உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதுச்சேரி மதுபாட்டில் கடத்தியவர் கைது

புதுச்சேரி மதுபாட்டில் கடத்தியவர் கைது

திண்டிவனம் : திண்டிவனம் அருகே பஸ்சில் புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய வாலிபரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார், மயிலம் அடுத்த பெரும்பாக்கம் செக்போஸ்ட்டில் நேற்று பிற்பகல் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, புதுச்சேரியிலிருந்து வந்த தனியார் பஸ்சில் சோதனை செய்ததில், 67 புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில் உளுந்துார்பேட்டை அடுத்த மழவராயனுார் பெரியசாமி மகன் வினோத், 24; என்பது தெரியவந்தது. உடன் வினோத்தை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ