உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரேஷன் கடையை உடைத்து சர்க்கரை, எண்ணெய் திருட்டு

ரேஷன் கடையை உடைத்து சர்க்கரை, எண்ணெய் திருட்டு

வானுார்: ரேஷன் கடையை உடைத்து பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட அட்டைதாரர்கள், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை இந்த ரேஷன் கடை கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், ரேஷன் கடை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விற்பனையாளர் வந்து பார்த்த போது, முன்பக்க கதவின் இரும்பு ராடை நீக்கி, அறைக்குள் இருந்த 10 பாக்கெட் பாமாயில் மற்றும் கிலோ கணக்கில் சர்க்கரை ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. இந்த கடையில் கடந்த அக்., 22ம் தேதி மர்ம ஆசாமிகள் புகுந்து, 25 பாக்கெட் பாமாயில், 8 கிலோ சர்க்கரையை திருடிச்சென்றது குறிப்பிடத்தக்கது. இது குறித்து புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை