செஞ்சி ஒன்றிய கூட்டம்
செஞ்சி: செஞ்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடந்தது.பேரூராட்சி மேலாளர் பழனி வரவேற்றார். பி.டி.ஓ.க்கள் நடராஜன், பிரபாசங்கர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஒன்றியத்தில் கடந்த மாதங்களில் நடந்த வரவு, செலவு மற்றும் வளர்ச்சி பணி, புதிய பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கி பேசுகையில், 'செஞ்சி ஒன்றியத்தில் நடந்து வரும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் பொதுமக்கள் அதிக அளவில் பயன் வரும் வகையில் ஒன்றிய கவுன்சிலர்கள் செயல்பட வேண்டும், கனவு இல்லம் வீடு கட்டும் திட்டம் உட்பட அனைத்து அரசு திட்டங்களும் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.ஒன்றிய துணைச் சேர்மன் ஜெயபாலன், கவுன்சிலர்கள் பச்சையப்பன், துரை, கேமல், டிலைட், சினுவாசன், செண்பகப்பிரியா, மல்லிகா மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.