கிளியனுார் துணை மின் நிலையம் விரிவாக்கம் செய்ய கோரிக்கை
வானுார் : கிளியனுார் துணை மின் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என சக்கரபாணி எம்.எல்.ஏ., சட்டசபையில் வலியுறுத்தி பேசினார்.நேற்று அவர் பேசுகையில், 'வானுார் தொகுதிக்குட்பட்ட கிளியனுார் பகுதியில், தற்போது, 33/11 கே.வி., துணை மின் நிலையம் இயங்கி வருகிறது . இந்த பகுதியில் தொழில் துறைகள், பள்ளி, கல்லுாரிகள் மற்றும் ஊரக மேம்பாடு வளர்ச்சியின் காரணமாக மின் தேவை அதிகரித்துள்ளது.மின் தேவைக்கு ஏற்றவாறு மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கச் செய்யும், உயரிய நோக்குடன் தேவைக்கேற்ப அதிக திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். கிளியனுார் 33/11 கே.வி., துணை மின் நிலையத்தை விரிவாக்கம் செய்து, 110/33 கே.வி., துணை மின் நிலையமாக மாற்றி அமைக்க வேண்டும்' என்றார்.