உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தலைமையாசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

தலைமையாசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த பள்ளிபுதுப்பட்டு அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி தலைமையாசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட உதவி கல்வி அலுவலர் (ஆதிதிராவிடர் நலத்துறை) கலியவரதன் பணி ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் செந்தாழை இசைக்குமாருக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார்.ஊராட்சி தலைவர் நதியா சுகேந்திரன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்கள் ஜெயச்சந்திரன், ராஜாராமன், ஆசிரிய பயிற்றுனர் முத்துவேல் ராமமூர்த்தி, விடுதி காப்பாளர் குமரேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.ஓய்வுபெற்ற செந்தாழை இசைக்குமாருக்கு கிராம மக்கள், மோதிரம், புடவை, தேங்காய், பூ, பழ வகைகள், இனிப்புகள், நினைவு பரிசு உள்ளிட்ட பொருட்களுடன் ஊர்வலமாக சென்று, மாலை அணிவித்து வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !