உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலை சேதம்: மக்கள் அவதி

சாலை சேதம்: மக்கள் அவதி

விழுப்புரம் : போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.விழுப்புரம் - திருவண்ணாமலை சாலை டட் நகர் கிராமத்தில் இருந்து கூடலுார், பாளையம் ஆகிய கிராமங்கள் வழியாக மாம்பழப்பட்டிற்கு தார் சாலை உள்ளது. இந்த தார் சாலை பல ஆண்டுளுக்கு முன் சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, இச்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை