தீ விபத்தில் கூரை வீடு சேதம்
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம், 50; இவர், தனது குடும்பத்துடன் சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அவரது கூரை வீட்டில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இது குறித்து காணை போலீசார் விசாரிக்கின்றனர்.