உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் தொகுப்பு விற்பனை

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் தொகுப்பு விற்பனை

விழுப்புரம்: விழுப்புரத்தில் கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் தொகுப்பு விற்கப்படுகிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:சென்னை பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் இயங்கும், தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பயன்படும் வகையில், மாதிரி வினாத்தாள் தொகுப்பு வழங்கப்படுகிறது. சிறந்த பாட வல்லுநர்களைக் கொண்டு, தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பத்தாம் வகுப்பிற்கு 3 புத்தகமும், 12ஆம் வகுப்பிற்கு 8 புத்தகமும் என மொத்தம் 11 புத்தகங்களை அச்சிட்டு, தமிழகம் முழுவதும் மாவட்ட விற்பனை மையங்களில் (பள்ளிகள்) விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலை பள்ளி, திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலை பள்ளி ஆகிய மையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி