உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போலி நகை அடகு: சேலம் பெண் கைது

போலி நகை அடகு: சேலம் பெண் கைது

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே போலி நகை அடகு வைக்க வந்த சேலம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், மடப்பட்டு அடுத்த கொரட்டூரை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி, 35; திருவெண்ணெய்நல்லுார் அருகே பெரியசெவலையில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று கடைக்கு வந்த 55 வயது பெண், தான் கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், 2 கிராம் மோதிரத்தை அடகு வைத்துக்கொண்டு பணம் கேட்டுள்ளார். அப்போது, ராஜிவ்காந்தி மோதிரத்தை வாங்கி பார்த்தபோது, போலி நகை என்பது தெரிந்தது.திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பெண்ணிடம் விசாரித்தனர். அதில் சேலம் மாவட்டம், அரிசிபாளையத்தை சேர்ந்த கணேசன் மனைவி நிர்மலா, 55; என்பதும், போலி நகையை அடகு வைக்க முயன்றதும் தெரிந்தது. போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ