உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை

செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி 9ம் நாள் விழாவாக நேற்று சரஸ்வதி பூஜை நடந்தது.மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 3ம் தேதி துவங்கியது. முதல் நாள் உற்சவர் அங்காளம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து தினமும் சுவாமி சிறப்பு அங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.நேற்று சரஸ்வதி பூஜையை முன்னிட்டு காலை அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்த, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன், அறங்காவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ