உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் மாவட்டத்தில் 9ம் தேதி பள்ளி, கல்லுாரி திறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 9ம் தேதி பள்ளி, கல்லுாரி திறப்பு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 9ம் தேதி பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படும் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்ததால், மாவட்டம் முழுதும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் பள்ளி, கல்லுாரிகளிலும் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் சீர் செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.இதனால், கடந்த நவம்பர் 29ம் தேதி முதல், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.மேலும், இன்றும் 6ம் தேதி பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வரும் 9ம் தேதி முதல் வழக்கம் போல் அனைத்து பள்ளி, கல்லுாரிகளும் இயங்கும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை