அறிவியல் தின கருத்தரங்கு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசூரில் உள்ள வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் உலக அறிவியல் தின கருத்தரங்கம் நடந்தது. அறிவியல் மற்றும் மனிதவியல் துறை சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு, தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாணவி தேவஸ்ரீ வரவேற்றார். முதல்வர் அன்பழகன் முன்னிலை வகித்தார். புதுச்சேரி அறவியல் மன்ற துணைத் தலைவர் ேஹமாவதி சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில், துணை முதல்வர், அறிவியல் மற்றும் மனிதவியல் துறை புல முதன்மையர் பெருமாள், துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவி சந்தியா நன்றி கூறினார்.