உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விஞ்ஞானிகள், விவசாயிகள் தொழில்நுட்ப கலந்துரையாடல்

விஞ்ஞானிகள், விவசாயிகள் தொழில்நுட்ப கலந்துரையாடல்

விழுப்புரம்: மரக்காணம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை ஆத்மா திட்டம் சார்பில் கிசான் கோஸ்திஸ் விஞ்ஞானிகள், விரிவாக்க பணியாளர்கள், விவசாயிகளின் தொழில்நுட்ப கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. சிறுவாடி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், மரக்காணம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஆரோக்கியராஜ், பாரம்பரிய விவசாயம், அங்கக வேளாண்மை குழுக்களுக்கு துறை மூலம் அளிக்கும் தொழில்நுட்ப பயிற்சி, இடுபொருட்களின் பயன்பாடு குறித்து கூறினார். திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருவரசன், கோடை உழவு மண் வள மேம்பாட, ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம், பயிர் சாகுபடி சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். முருக்கேரி உதவி கால்நடை டாக்டர் கோமதி, கால்நடை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி கூறினார். மரக்காணம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் நரசிம்மராஜ், உதவி வேளாண்மை அலுவலர் ரஞ்சனி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சந்திரசேகர், அய்யனார் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், வேளாண் கருத்து காட்சி அமைக்கப்பட்டிருந்தது. பயிற்சியில், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ