உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மரக்காணம் கடற்கரையில் கடல் ஆமைகள் இறப்பு

மரக்காணம் கடற்கரையில் கடல் ஆமைகள் இறப்பு

மரக்காணம் : மரக்காணம், தீர்த்தவாரி கடற்கரையில் 18 கடல் ஆமைகள் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.ஆண்டுதோறும், டிசம்பர் மாதம் துவங்கி, மார்ச் மாதம் வரை, கடல் ஆமைகள் முட்டையிடுவதற்காக கரைக்கு வருகின்றன. இந்நிலையில் நேற்று மதியம், மரக்காணம், தீர்த்தவாரி கடற்கரையில் 18 கடல் ஆமைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் மாவட்ட வனத்துறை அலுவலர் கார்திகேயனி மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் விரைந்து சென்று, இறந்து கிடந்த ஆமைகளை சேகரித்து உடற்கூறு ஆய்வு செய்து கடற்கரையில் புதைத்தனர்.கடல் ஆமைகள் இறந்து கிடந்த இடத்தின் அருகிலுள்ள தனியார் கம்பெனி யில் இருந்து கழிவுநீர் வெளியானதால் கடல் ஆமைகள் இறந்துள்ளதா அல்லது வேறு ஏதாவது நோய் தாக்கி இறந்ததா என்பது குறித்த வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ