அரசு கல்லுாரியில் இன்று இரண்டாம் கட்ட கலந்தாய்வு
விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் நாளை இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு நடக்கிறது.கல்லுாரி முதல்வர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:கல்லுாரியில் இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு இன்று 27 ம்தேதி காலை 9:30 மணிக்கு நடக்கிறது. இதில், பி.எஸ்.சி., - பி.சி.ஏ., அறிவியல் பிரிவுக்கு, கட்ஆப் மதிப்பெண் 279 முதல் 260 வரை பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.தொடர்ந்து, பி.ஏ., தமிழ் சுழற்சி 2க்கு மட்டும் கட் ஆப் மதிப்பெண் 78 முதல் 60 வரையிலும், பி.ஏ., ஆங்கில பிரிவுக்கு கலந்தாய்வு நடக்கிறது.கலந்தாய்வில் பங்கேற்க மொபைல் எண்ணுக்கு தகவல் அனுப்பிய நபர்கள் மட்டுமே பங்கேற்க வர வேண்டும். மேலும் விபரங்கள் பெற இணையதள முகவரி http://www.aagacvpm.edu.in/ காணலாம்.மாணவர்கள் கலந்தாய்வு தினத்தில் காலை 9:00 மணிக்கு சேர்க்கை அரங்கில் இருக்க வேண்டும். தாமதமாக வருவோர் அந்த நேரத்தில் சென்று கொண்டிருக்கும் மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர். பதிவிறக்கம் செய்த விண்ணப்பம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், சமீபத்தில் பெற்ற ஜாதி சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் 3 நகல்கள், பாஸ்போட் சைஸ் போட்டோ, பெற்றோர் அல்லது பாதுகாவலர் போட்டோ, வங்கி கணக்கு அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார், ரேஷன் கார்டு நகல் 3, உரிய சேர்க்கை கட்டணத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.