உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தில் விதைகள் வழங்கும் திட்டம் துவக்கம்

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தில் விதைகள் வழங்கும் திட்டம் துவக்கம்

விழுப்புரம்: அத்தியூர்திருவாதியில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தில், பொது மக்களுக்கு காய்கறி, பயிறு வகை விதை தொகுப்புகள் மற்றும் பழச்செடிகள் 100 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது.விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., திட்டத்தை தொடங்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு காய்கறி, பயறு வகைக்கான விதை தொகுப்புகளையும், பழ மர கன்றுகளையும் வழங்கினார்.ஊராட்சி தலைவர் நாகஜோதி பாலு வரவேற்றார். கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் முருகவேல், மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி கேசவன், வனிதா ஹரிராமன், அவைத் தலைவர் கண்ணப்பன்.பொதுக்குழு உறுப்பினர் சம்பத், ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட பொறியாளர் அணி புகழ்செல்வகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் சடகோபன், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன்.ஊராட்சி துணை தலைவர் உஷா ஜோதி, கிளைச் செயலாளர் ராமதாஸ், ஊராட்சி உறுப்பினர்கள் சிவா, சண்முகசுந்தரம், ராமமூர்த்தி, ஏழுமலை மற்றும் வேளாண்துறை அலுவலர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ