விழுப்புரம் நகரின் கல்வி அடையாளம் இ.எஸ்.எஸ்.கே., கல்வி குழுமம் தலைவர் செந்தில்குமார் பெருமிதம்
விழுப்புரம் நகரின் கல்வி அடையாளமாக இ.எஸ்.எஸ்.கே., கல்வி குழுமம் செயல்பட்டு வருவதாக தலைவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: விழுப்புரம் நகரில் கடந்த 36 ஆண்டுகளாக இளைஞர்களின் உயர்கல்வி மேம்பாட்டிற்காக இ.எஸ்.எஸ்.கே., கல்வி குழுமம், தனித்திறனோடு இயங்கி வருகிறது. எளிய மக்களின் பிள்ளைகள் எதிர்காலத்தை ஏற்றமிகுந்ததாக மாற்றிடும் முனைப்பில், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி (தன்னாட்சி), இ.எஸ்., செவிலியர் கல்லுாரி, இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, இ.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரி, தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லுாரி, தெய்வானை அம்மாள் வணிக மேலாண்மை நிறுவனம் ஆகிய கல்வி நிறுவனங்களை சேவை நோக்கோடு நடத்தி வருகிறது. தேசிய தர சான்றிதழில் விழுப்புரம் மாவட்டத்திலேயே 'ஏ பிளஸ்' தகுத்திறம் பெற்ற முதல் கல்லுாரி, தமிழகத்தில் உள்ள பெண்களுக்கான சுயநிதி கல்லுாரிகளில் 3வது இடமும், அடல் தரவரிசையில் செயல்திறன் மிக்க கல்வி குழுமத்திற்கான சிறப்பு சான்றும் பெற்றுள்ளது. தமிழகத்தில் பெரும் நகரங்களில் உள்ள கல்லுாரிகளுக்கு நிகராக செயல்முறை கூடங்கள், ஆய்வு கூடங்கள், இந்திய அரசின் டி.எஸ்.டி., பிஸ்ட் நிதி பெற்று இளைஞர்களை ஆராய்ச்சி திட்டங்களில் சிறப்பாக பங்களிப்பை மேற்கொள்ள வழிவகை செய்து வருகிறது. தமிழகத்தில் முதல்முறையாக பெண்களுக்கு துவங்கப்பெற்ற முதல் வணிக மேலாண்மை நிறுவனமாக, தெய்வானை அம்மாள் வணிக மேலாண்மை நிறுவனம் திகழ்கிறது. இந்த கல்லுாரி தன்னாட்சி அங்கீகாரம் பெற்றுள்ளதால், கற்றல் பயன் சார்ந்த கல்வி முறையோடு தொழில்நுட்பம், தொழில்துறை, தொழில் முனைவு திறன் சார்ந்த புதிய பிரிவுகளான ஆர்ட்டிபிசியல் இன்டிலிஜன்ஸ், சைபர் செக்யூரிட்டி, டேட்டா சைன்ஸ், கிளினிக்கல் நியூட்ரிஷன் மற்றும் டையாபட்டிக்ஸ், காஸ்ட்யூம் டிசைன் மற்றும் பேஷன், தகவல் தொழில்நுட்பம்) நவீன கால வளர்ச்சிக்கு ஏற்ப துறை சார்ந்த தொழில்முறை சார்ந்த, நவீனத்துவமிக்க சிறப்பு பாடங்களை (பிளாக் செயின் டெக்னாலஜி, டேட்டா சயின்ஸ், தடய அறிவியல், நேனோ சயின்ஸ், ஏ.ஐ., இன் பைனான்ஸ் மற்றும் பைன்டெக்) அறிமுகம் செய்துள்ளோம்.கல்லுாரி வளாகத்திலேயே வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவு சார்ந்த பயிற்சிகள் நடத்தப்படுகிறது. மேலும், தொழில்முறை சார்ந்த நவீன பாட திட்டங்களை பெரும்பாலான துறைகள் தனது பாட திட்டங்களில் பெற்றுள்ளதால், மாணவிகள் வளாக நேர்முக தேர்வுகளில் தமது திறன்களை வெளிப்படுத்தி பன்னாட்டு, தேசிய அளவிலான முன்னணி நிறுவனங்களில் ஆண்டு ஊதியாக ரூ. 4 லட்சம் முதல் ரூ.8.5 லட்சம் வரை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செந்தில்குமார் கூறினார்.