உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஈ.மண்டகப்பட்டில் தொழிற்பேட்டை அமைப்பதற்கான இடம் ஆய்வு

ஈ.மண்டகப்பட்டில் தொழிற்பேட்டை அமைப்பதற்கான இடம் ஆய்வு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதியில் தொழிற்பேட்டை அமைப்பதற்கான இடத்தை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். விக்கிரவாண்டி அடுத்த ஈ.மண்டகப்பட்டில் தொழிற்பேட்டை அமைக்க நேற்று மாலை தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா தலைமையில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவன கிளை மேலாளர் முகமதா பேகம், தாசில்தார் செல்வமூர்த்தி, பி.டி.ஓ., முகமது சையது ஆகியோர் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்குப்பின், அப்பகுதி மக்களிடம் இடம் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை செய்து தொழிற்பேட்டை அமைக்க தேவையான, 25 ஏக்கர் பரப்பளவு இடத்தை அளவீடு செய்து தருமாறு தாசில்தாரிடம் தெரிவித்தார். வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, வி.ஏ.ஓ., சிவரஞ்சனி, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ஜெயபால், முருகன், திட்டக்குழு முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் அருணாசலம் , முகிலன், செல்வம், முன்னாள் ஊராட்சி தலைவர் கருணாநிதி, ஒன்றிய விவசாய அணி ராஜா, கிளைச் செயலாளர் ரமேஷ், ஊராட்சி தலைவர் அரசகுமாரி அரிகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி அசோக்குமார், சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை